பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்குயில் வேதநாயகர் 25 தோங்க வேண்டும் ; அது சார்ந்து, நீதிமன்றங் களில் தமிழ் மொழியிலேயே சட்டதிட்டங்களும் அமைக்கவேண்டும் : வழக்குரைஞர்களும், வாதிப் பிரதிவாதிகளும் தமிழிலேயே எதையும் எடுத்துச் சொல்லவேண்டும். நாட்டில் சுதந்திர ஒளி வீச வேண்டும்’ என்று வேதநாயகர் பேசிய பேச்சிலிருந்து இவருடைய உள்ளம் தெள்ளிதின் விளங்குகின்றது. இத்தகைய எ ண் ன ங் க ள் இவருடைய நெஞ்சத்தில் நிலைத்திருந்தமையாலும், நீதிபதி யாகப் பணியாற்றிவந்தமையாலும் சட்டங்களை இவர் மொழிபெயர்க்க முயன்ருர், நேரங் கிடைத்த போதெல்லாம் உயர்நீதி மன்றத்தின் சட்டங்களை யும் தீர்ப்புகளையும் இவர் சிறிதுசிறிதாக மொழி பெயர்த்துவந்தார். கி.பி. 1805ஆம் ஆண்டு முதல் கி. பி. 1861ஆம் ஆண்டு முடிய உள்ள சட்டங்களை இவர் தமிழில் மொழிபெயர்த்தார்; அனைத்தையும் ஒன்றுசேர்த்து அச்சிட்டு வெளியிட்டார். இப் பெருமகளுர் செய்த மொழித்தொண்டின் பயனகத்தான், இன்று தமிழார்வம் பூத்துக் குலுங்கி மலர்ந்து மணம் வீசிவருகின்றது. உ. இசைக்குயில் தமிழ்நாட்டில், தமிழ்மக்கள் முன்னிலையில் தமிழர்கள் பாடிவந்த இசையரங்குகளில், தமிழை ஒதுக்கிவிட்டுப் பிறமொழிப் பாடல்களையே அக் காலத்தில் பாடிவந்தார்கள் அத்தகைய நிலையில் தமிழிசைக்கு முதன்மை தரவேண்டும் என்று