பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாடுங் குயில்கள் எண்ணினர் வேதநாயகர். இவர் குறிப்பிட்ட ஒரு சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், சமயச் சார்பில்லாமல், பொதுவான கருத்துகளைப் புகுத்திப் புதுமையான முறையில் பாடல்களை இயற்றித் தமிழிசையைப் பரப்பினர். தமிழிசையின் மறு மலர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த பெருமை இவரைச் சாரும். இசைப்பாடல் இயற்றக் காரணம் வேதநாயகர், திரிசிரபுரத்திலிருந்த மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணி யாற்றிக் கொண்டிருந்தபொழுது, இசை நிகழ்ச்சி களுக்குத் தவருது சென்று கேட்டு மகிழ்வார். அரங்குகளில் பாடிய இசைவானர் பிறமொழிப் பாடல்களையே பாடிவந்தனர். தமிழ்நாட்டில் விசய நகர மன்னர்கள் ஆட்சியும், நாயக்க மன்னர்கள் ஆட்சியும் பரவியிருந்தமையால், தெலுங்குமொழி ஆதிக்கம் பெற்றிருந்தது. அதனல் பாடல் இயற்றும் ஆசிரியர்கள் தெலுங்குப் பாடல்களை இயற்றத் தொடங்கினர்கள். இசைவாணரும் அவற்றையே மேடைகளில்,பாடி வரலாயினர். இவ்வாறு தென் மாவட்டங்களில் நடைபெற்ற எல்லா இசையரங்கு களிலும் பிறமொழிப் பாடல்களே முழங்கி வந்தன. இசையரங்குகளில் பிறமொழிப் ப ா ட ல் களையே கேட்டுவந்த வேதநாயகரின் மனம் மிக வருந்தியது. தமிழ்நாட்டில் தமிழ்ப்பாடல்களைக் கேட்க முடியவில்லையே என்று இவர் எண்ணி பெண்ணிப் பலநாள் நொந்து தவித்தார். மேலும்,