பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்குயில் வேதநாயகர் 27 ர்ேத்தனை அமைப்பில் பாடல்கள் இயற்றத் தமிழ் மொழி இடந்தாராது என்னும் தவருன கருத்தும் அப்பொழுது நாட்டில் உலவியது. இக் கருத்தைக் கேள்விப்பட்ட வேதநாயகர், தமிழுக்கு இப்படி ് (I) பழி வரலாமா? எனத் துடித்தார்; அப் பழியை நீக்க வேண்டும் என்று சிந்தித்தார்; தாமே கீர்த்தனை அமைப்புகளில் தமிழ்ப்பாடல்கள் இயற்றுவதென முடிவு செய்தார். வேதநாயகர்க்கு இயல்பிலேயே தமிழ்ப் புலமை நிறைந்திருந்தது. ஆயினும், இசைப்புலமையும் பாடுந்திறனும் இருந்தால், சிறந்த முறையில் இசைப் பாட்டுகளே இயற்றலாம் என்று இவர் எண்ணிஞர். அதனுல் இசைப்பாட்டுப் பாடும் இரண்டு இசை வானர்களுடன் தொடர்புகொண்டார்; அவர் களிடம் மானவராக இருந்து, பெரிதும் முயன்று இசை பயின்ருர் ; முயற்சி திருவினையாக்கும் என்னும் முதுமொழிக்கேற்ப நன்கு பாடும் ஆற்றலையும் பெற்ருர். தமிழ்ப்புலமை, இசையறிவு, பாடுந்திறமை ஆகிய இம்மூன்றும் வாய்க்கப் பெற்ற வேதநாயகர் தமிழில் இசைப்பாட்டுகள் இயற்றினர்; இசை யரங்குகளில் அவற்றைப் பாடுமாறு செய்தார். ர்ேத்தனை முறையில் தமிழில் பாடமுடியாதென்ற கருத்தை முறியடித்துக் காட்டினர்; தமிழை மறந்து, பிறமொழியோசையில் மயங்கிக்கிடந்த தமிழகத்தில் ஒரு புரட்சியையே உண்டாக்கி விட்டார் என்று சொல்லலாம். 武人