பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக்குயில் தேவிகவிநாயகம் | றுெவர் சிறுமியர்க்கே காணிக்கையாக்கித் தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கின்ருர். செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்கு இந்த நூல் உரியதாய் என்றும் வாழ்கவே என்று இவர் தமது நூலில் எழுதியிருப்பதால், நாட்டின் இளம்பாலாரிடத்தே கவிமணி எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது நன்கு புலகுைம். இளந்தலையார் நலத்திலே அக்கறைகொண்டு விளங் யெ இப் பெருமகளுரைக் குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாவா? அ. இளமைப் பருவம் பிறப்பும் கல்வியும் - கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரத்தை அடுத்துத் தேரூர் என்னும் சிற்றுார் உளது. அவ் ஆரில் வேளாண் மரபினர் சீருஞ்சிறப்புமாக வழிவழி வாழ்ந்து வருகின்றனர். அம் மரபில் விவதாணுப்பிள்ளை என்ற பெருமகளுர் ஒருவர் பிறந்து, சிறந்து விளங்கினர். இவர் ஆங்கிலங் கற்றவர் ; தமிழார்வம் மிக்கவர் ; உப்பளத்தில் அரசுப் பணியாளராகப் பொறுப்பேற்று வாழ்ந்து வந்தார். இவருக்கு ஆதிலட்சுமி அம்மையார் என்பவர் வாழ்க்கைத் துணைவியாராக விளங்கினர். இவர்கள் செய்த நல்வினைப் பயனுகக் கி. பி. 1876ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 27ஆம் நாள் (தாது வருடம் ஆடி மாதம் 14ஆம் நாள்) கவிமணி தேசிகவிநாயகம் இவர்களுக்கு நன்மகனாகத் தோன்றினர்.