பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பாடுங் குயில்கள் சிவதாணுப் பிள்ளையும் ஆதிலட்சுமி அம்மை யாரும் தங்களுடைய ஒரே ஆண்மகவான இவரைக் கண்ணெனப் போற்றி வளர்த்தனர். குழந்தைப் பருவங் கடந்து, கல்விப் பருவம் எய்திய தேசிக விநாயகம், தேரூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பெற்ருர். அப்போது தமிழ்நிலமாகிய நாஞ்சில் நாடு திருவாங்கூர் ஆட்சிக்குள் இருந்தமை யால், இவர் மலையாள மொழியையே கற்க வேண்டியவரானர். அம் மொழியைக் கற்றுவந்தா லும், தமிழ்மொழியில் ஒரு தனியார்வம், இவர் நெஞ்சத்தில் ஊறிக்கொண்டேயிருந்தது. இடை யருது அந்த ஆர்வம் வளர்ந்துகொண்டே வந்தமை யால், அது நிறைவேறுங் காலமும் வந்து சேர்ந்தது. எண்ணிய எண்ணியாங் கெய்துப, எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப, எண்ணிய, வண்ணம் இவர் தமிழ்ப் புலமையும் பெற்ருர், தேரூரின் வட எல்லையில் உள்ள பெரிய ஏரியின் நடுவே வாணன்திட்டு என்னும் பெயருடன் ஒரு திவுத்திடல் இருக்கிறது. அத் திட்டிலிருக்கும் திருவாவடுதுறை மடத்தில் சாந்தலிங்கத் தம்பிரான் என்னும் பெரியார் தலைவராக இருந்தார். அவ சமயத் துறையில் எவ்வளவு பேரறிவு படைத்திருந் தாரோ அந்த அளவிற்கு இலக்கிய இலக்கணங் களிலும் திறமை படைத்தவராக விளங்கினர் அவரிடம் கவிமணியும் வேறு சிலரும் தமிழ் கற்க தொடங்கினர். தொடக்கப் பள்ளியில் படித்து