பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாடுங் குயில்கள் பண்டங்கள் நிறைந்த தட்டொன்று இருந்தது. தம்பிரான் அவற்றை அவர்களுக்குக் கொடுக்க எண்ணினர் ; ஆயினும் ஒப்பித்தல் போட்டி வைத்து, அதில் வெற்றி பெறுபவர்க்குக் கொடுக்கக் கருதினர்; சிறுவர்களை அழைத்தார்; நான் தேவாரப் பாடல் ஒன்றைப் பாடுவேன். பிறகு புத்தகத்தைப் பார்த்து, உங்களுள் ஒருவர் அதைப் படிக்கவேண்டும். அதன் பின்னர், மீண்டும் ஒரு முறை நான் பாடுவேன். இவ்வாறு மூன்று முறை கேட்ட அந்தப் பாடலை யார் பிழையில்லாமல் சொல்கின்றீர்களோ அவர்களுக்கு அப்பமோ, வடையோ கொடுக்கப்படும் என்று ஒரு போட்டி வைத்தார். போட்டியில் கவிமணியே வெற்றிமேல் வெற்றி பெற்ருர். தம்பிரானுக்குப் பக்கத்திலிருந்த அப்பம் வடையெல்லாம் கவிமணிக்கு முன்னல் வந்துசேர்ந்தன. உடனிருந்த மாணவர்களுக்குத் தோல்வியைப்பற்றி அவ்வளவு கவலையில்லையென் ருலும், தின்பண்டங்கள் அவ்வளவும் போயினவே என்ற ஏக்கம் மிகுதியாக இருந்தது. இரக்கமும் அன்பும் கொண்ட கவிமணி அவற்றை எல்லார்க்கும் பகிர்ந்து கொடுத்தார். இந்த நிகழ்ச்சியினல் கவிமணியின் நினைவாற்றல் புலப்படுகிறது. ஆங்கிலப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, கவிமணி ஒர் அழகான பாடலை இயற் றினர். அது சிறந்த பாடல் என்று இவர் உணர்ந் தார் ; ஆயினும், மற்றவர்கள் அதனை எப்படிக் கருதுகின்ருர்கள் என்று அறிய ஆசைப்பட்டார்; அதனல், அந்தப் பாடலே ஒரு தாளில் எழுதித்