பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக்குயில் தேசிகவிநாயகம் 35 தமிழாசிரியர் இருக்கைக்குப் பக்கத்தில் யாரும் அறியாவண்ணம் வைத்துவிட்டார். அங்கு வந்த தமிழாசிரியர் அதனைக் கண்டார்; அதை எடுத்துப் படித்துப்பார்த்தார்; பாடல் மிகச் சிறந்த முறை யில் அமைந்திருந்ததைக் கண்டு மிகுதியாகப் பாராட்டி, யாருடைய பாடலென்று அறிய முடியவில்லையென்ருலும், சொல்லழகும் பொரு ளழகும் நிறைந்திருக்கிறது ? என்று வியந்து கூறினர். தம்முடைய பாடல் தம்முடைய ஆசிரிய ராலேயே பாராட்டப் பெறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கவிமணி, மனத்துக்குள்ளேயே மகிழ்ந்துகொண்டார். அவ்வப்பொழுது கவிமணி, வேடிக்கையாகத் தம் கவித்திறன் வெளிப்படுமாறு, பாடல்களைத் தனித்தனியாகப் பாடிவந்தார். ஒருசமயம் தம்பி ாான் வேண்டிக்கொண்டதற்கினங்கத் தேரூர்ப் பெருங்குளத்தின் நடுவே கோவில்கொண்டிருக்கும் அழகம்மைபtது பத்து விருத்தப் பாக்கள் பாடினர்; 'அழகம்மை ஆசிரிய விருத்தம்’ என்று அந் நாலுக்குப் பெயர் வைத்தார். அப் பாடல்களில் பத்திச் சுவை, இனிமை, கனிவு, கற்பனை யாவும் விளங்கும். பின்னர் இவர் தம்முடைய குலதெய்வ மாகிய அழகிய மணவாள விநாயகர்பtதும், கசிந்திரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் மீதும் பாடல்கள் பல பாடினர். ஆராய்ச்சி மனப்பான்மை கவிமணிக்கு இளமையிலேயே, எதையும் ஆராய்ந்துபார்க்கின்ற ஆர்வம் இயல்பாக அமைந்