பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாடுங் குயில்கள் திருந்தது. இந்த ஆர்வம் தென்னிந்திய வரலாற்று ஆராய்ச்சியிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் இவரை ஈடுபடுத்தியது. அரசுக் கல்வெட்டு ஆராய்ச்சித் துறையில் கணேசப் பிள்ளை என்பவர் பணியாற்றி வந்தார். அவர் திருவனந்தபுரத்தில் தங்கியிருந்தாலும், அடிக்கடி தேரூருக்கு வருவார். அவருடன் கவிமணி தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. அவருடைய தொடர்பு கவிமணியின் ஆராய்ச்சி ஆர்வத்தை வளரச் செய்தது. சுங்கான்கடை என்னும் இடத்துக்கு அருகில் பழங்கோட்டை ஒன்று இருந்தது என்று ஆராய்ந்து, அதற்குரிய சான்றுகளும் தொகுத்து எழுதிவைத் திருந்தார் கணேசப் பிள்ளை. அவர் எழுதிவைத் திருந்த அந்த ஆராய்ச்சிக் குறிப்புகளை, அவர் அறியாவண்ணம் காணும் வாய்ப்பைக் கவிமணி பெற்ருர், அக் கருத்தை மறுத்துத் தகுந்த சான்று களும் காட்டி, ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றினை எழுதி, திருவாங்கூர் டைம்ஸ் என்னும் ஆங்கில இதழில் இவர் வெளியிட்டார். இக் கட்டுரையைப் படித்துப் பார்த்த கணேசப் பிள்ளை திகைத்துப் போளுர். வெளியிடப்பட்டுள்ள தென்னிந்தியக் கல் வெட்டுகள் அனைத்தையுமே கவிமணி கற்றுத் தெளிந்துவைத்திருந்தார் ; இவற்றைப் படித்து, நிறைந்த செய்திகளைத் தொகுத்துவைத்திருந்தார் ; அதன் பயனாகக் காந்தளூர்ச்சாலை எ ன் னு ம்