பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக்குயில் தேசிகவிநாயகம் 37 ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளி விட்டார். அந் நூலில் இவருடைய ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சித் திறனும் வெளிப்பட்டன. இவர் தொகுத்து வைத்திருந்த மொழியாராய்ச்சிக் குறிப்புகளும், இலக்கண ஆராய்ச்சிக் குறிப்பு களும், கல்வெட்டு ஆராய்ச்சிக் குறிப்புகளும் பலருக்குப் பெரிதும் பயன்பட்டன. தவருன ஆராய்ச்சிகள் வெளிவந்தால், அவற்றிற்குத் தகுந்த சான்று காட்டி இவர் மறுப்புரைகள் எழுதுவதுண்டு; நூற்பதிப்புகளில் பிழைகள் காணப்படும்பொழுது, அவற்றைத் திருத்திக்கொள்ளுமாறு காரணங்காட் டிப் பதிப்பாசிரியர்க்கு எழுதுவார். ஆ. ஆசிரியப் பணி திருமணம் கவிமணி ஆங்கிலப் பள்ளியில் பயிலும் பொழுதே கவிதை எழுதுதல், ஆராய்ச்சிக் கட்டுரை வரைதல் போன்ற துறைகளில் ஆர்வங் காட்டியபோதிலும், படிப்பில் கருத்துடனேயே இருந்துவந்தார்; உயர் நிலைப் படிப்பை முறையாகப் படித்து முடித்தார். பின்னர், இவர் கல்லூரியில் சேர்ந்தார்; கல்லூரியில் ஒராண்டே படித்தார். குடும்பப் பொறுப்பு மிகுதி யாகவே படிப்பை நிறுத்திவிடவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவர்தம் இருபத்தைந்தாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர்க்கு வாழ்க்கைத்துணையாக'