பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாடுங் குயில்கள் வாய்த்தவர் உமையம்மை என்னும் பெயருடையவர் ஆவார். இவ்வம்மையார் நாகர்கோவிலை அடுத் துள்ள புத்தேரியில் பிறந்தவர் ; நற்குண நற் செயல்கள் நிரம்பப் பெற்றவர். இல்லற வாழ்க்கை இனிதே நடைபெற்று வரும் போது, ஏதேனும் ஒரு பணியில் அமரவேண்டும் என்ற எண்ணம் இவருக்கு உண்டாயிற்று. அரசுப் பணியாக இருந்தால் நல்லது என்று இவர் எண்ணி ர்ை ; எந்த வேலையில் சேர்வது என்று சிந்தித்தார். கவிமணி அடக்கமுடையவர்; பொறுமை மிகுந்தவர்; கருணையுள்ளங் கொண்டவர்; ஆராயும் பண்புடை யவர்; தம் எண்ணங்களைக் கவிதையாகவும் கட்டுரை யாகவும் பிறருக்கு எடுத்துரைக்கும் இயல்புடை யவர்; சொல் வன்மையும் உடையவர். பொதுவாக நல்லாசிரியர் ஒருவர்க்கு வேண்டும் பண்புகள் அனைத்தும் இவரிடம் குடிகொண்டிருந்தன. அதனல் இவர் ஆசிரியப் பணியில் அமர்வதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். ஆசிரியத் தொழில் மிக மிகத் துய்மை வாய்ந்தது. இவர் இயல்புக்கும் அதுவே ஏற்ற தொழிலாயிருந்தது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆசிரியப் பணியை மேற்கொள்வதென்னும் முடிவுக்கு வந்த கவிமணி முதன்முதலில் கோட் டாற்றிலுள்ள தொடக்கப் பள்ளி யொன்றில் ஆசிரியராய் அமர்ந்தார். ஆசிரியர்க்குரிய நல்லியல் புகள் அத்துணையும் வாய்க்கப்பெற்றிருந்தமையால், அத் தொழிலில் இவர் சிறந்து விளங்கிஞர்.