பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக்குயில் தேசிகவிநாயகம் 39. தொடக்கத்திலே இவர் இளஞ் சிருர்க்கு ஆசிரியராக அமர்ந்த காரணத்தால், அவர்களுடைய உளப் பாங்கை நன்கு அறிந்துகொண்டார். அதனல் தான் குழந்தைகளுக்காகக் கவிதை எழுதுவதில் இவர் ஒப்பற்று விளங்கினர். இவர் கற்பிக்கும் திறனும், குழந்தைகளிடம் காட்டும் அன்பும், எளிமையும், இனிமையும் மாணவர்களைக் கவர்ந் தன; நல்லாசிரியர் என்னும் புகழும் பரவியது. பதவி உயர்வு குழந்தைகளின் மனப் பாங்கறிந்து கற்பித்து வரும் கவிமணியின் சிறப்பு, நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. இ தனை யறி ந் த அரசினர், இவரைக் கோட்டாற்றிலுள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஒர் ஆசிரியராக நியமித்தனர். இத் தொழிலுக்குப் பெரிதும் தகுதியுடையவராக இருந்தமையால் அங்கும் இவர் சிறந்து விளங்கினர்; அதன் பின்னர், திருவனந்தபுரத்திலுள்ள மகளிர்க்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கு மாற்றம் பெற்ருர். அங்கே பணியாற்றி வந்தபொழுது, இவருடைய தமிழ்ப் புலமையறிந்த அரசினர், திருவனந்தபுரம் அரசினர் மகளிர் உயர்நிலைப் ப ஸ் வளி யி ல் இவரைத் தமிழாசிரியராக அமர்த்தினர். சில ஆண்டுகளுக்குப் பின், இவர் மகளிர் கல்லூரிக்குத் தமிழ் விரிவுரை யாளராக மாற்றப்பட்டார். ஒய்வு பெறும் வரை இப்பதவியிலேயே தொடர்ந்து பணியாற்றிவந்தார். கல்லூரியில் பணியாற்றி வந் த பொழுது, கல்லூரித் தலைவியாக இருந்த அம் ைம யார்,