பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாடுங் குயில்கள் இவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்; தம் உடன் பிறந்தவரைப்போலக் கருதிக் கல்லூரித் தொடர் புள்ள எச் செயலையும், இவருடன் கலந்து பேசிச் செய்துவந்தார் ; பல பொறுப்புகளையும் இவரிடம் ஒப்படைத்திருந்தார். இவர் மற்ற ஆசிரியர்களின் அன்பையும் நன் மதிப்பையும் பெற்றுத் திகழ்ந்தார். மாணவி களுக்கு இவர் கற்பித்த முறை தனித்தன்மை வாய்ந்தது; பாடங்களைத் திணிக்காமல், மாணவிய ரிடம் அமைந்திருக்கும் அறிவொளியைத் துலக்க முறச் செய்யும் ஒரு துாண்டுகோலாகவே இவர் விளங்கினர். அன்புடன் எதனையும் இவர் உணர்த்தி வந்தமையால், மாணவியரும் இவரைத் தந்தை போல் எண்ணி இவரிடம் பெருமதிப்புடன் நடந்து வந்தனர். இவர் ஐம்பத்து மூன்று வயதுவரை பணியாற்றி வந்தார். கவிமணி தன்மான உணர்வும் தன்னம்பிக்கை யும் உடையவராக வாழ்ந்து வந்தார் ; தம் பதவி உயர்வுக்காகவோ வேறு காரணங்களுக் காகவோ எவரையும் கெஞ்சி நிற்கமாட்டார். அடக்கமும் பணிவும் உடையவராக இருந்தாலும் இவர் தன்மதிப்பு மிக்கவராகவே வாழ்ந்தார்; பெரு மிதத்துடனேயே இறுதிவரை திகழ்ந்தார். உயர் நிலைப் பள்ளியிலிருந்து கல்லூரிக்கு வரவேண்டு. மென்று இவர் விரும்பவில்லை. இவருடைய தமிழ்ப் புலமையை அறிந்துகொண்ட கல்லூரித் தலைவியின் முயற்சியினலேயே இவர் கல்லூரிக்கு வந்தார்.