பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக்குயில் தேசிகவிநாயகம் 41) இவரைப் பேராசிரியராக்கக் கல்லூரித் தலைவி முயன்று கொண்டிருந்தபோது, கல்வித்துறைத் தலைவர், கவிமணியின் தகுதியைக் காட்டும் சான் றிதழ் ஒன்று தேவை என்ருர். இதனையறிந்த கவி மணி, என் தகுதியைக் காட்டச் சான்றிதழுக்காக எவரிடமும் சென்று நிற்கவும் வேண்டா; எனக்குப் பதவி உயர்வும் வேண்டா? என்று கூறிவிட்டார். இவருடைய இயல்பையும் திறமையையும் நன்கு தெரிந்திருந்த கல்லூரித் தலைவி, தாமே கல்வித் துறைத் தலைவரைக் கண்டு பரிந்துரை செய்து, அவ் வேலை கிடைக்குமாறு செய்தார். எனினும், அப் பதவியை ஏற்கக் கவிமணி ஒருப்பட்டிலர்; ஒய்வுபெற மேலும் இரண்டாண்டுகள் இருந்தும், முன்பாகத் தாமே விலகிக்கொண்டார். இ. கவிமணியின் நூல்கள் க வி ம னி தமிழ்நாட்டிற்குப் படைத்துக் கொடுத்த நூல்களை மூன்று வகையாகக் கொள்ள லாம். ஒன்று கவிதை நூல்கள்; மற்ருென்று இசைப் பாடல்கள்; மூன்ருவது உரைநடை நூல்கள். 'மலரும் மாஆலயும், ஆசிய ஜோதி, உமார் கயாம் பாடல்கள், நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் என்பன கவிதை நூல்கள். தேவியின் கீர்த்தனங்கள் இசைப் பாடல்களால் ஆன நூல். கவிமணியின் உரை மணிகள், காந்தளூர்ச்சாலை’ என்பன உரைநடை நூல்கள். இவற்றுள் காந்த -நர்ச்சாலை வரலாற்று அடிப்படையில் எழுந்த