பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பாடுங் குயில்கள் ஆராய்ச்சி நூல். இஃது ஆங்கிலத்தில் அமைந்தது; இதுவேபோன்று இவர் அவ்வப்போது பத்திரிகை களில் வெளியிட்ட ஆங்கிலக் கட்டுரைகள் பல இன்னும் நூல் வடிவம் பெறவில்லை. கவிதை நூல்கள் மலரும் மாலையும் என்பது கவிமணி பல்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல். பத்திப் பாமலர்களே முதலிலும் கதம்பப் பாமலர்களை இறுதியிலும் கொண்டு இலக்கியமனம் கமழ்வது இம் மாலை. வெண்ணிலா, கடல், மலர்கள் போன்ற இயற்கைப் பொருள்களைப்பற்றிப் பாடிய பாடல்கள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. பசு, பொம்மைக் கலியாணம், கடிகாரம், கிளி, நாய், கோழி முதலிய தலைப்புகளில் குழந்தைகளுக்காகவே பாடப்பெற்ற பாடல்களும் இதில் உண்டு. சமூகக் கொடுமைகளை அகற்றுவதற்காகப் பாடிய பாடல் களும் தத்துவக் கருத்துகள் அடங்கிய பாடல்களும் நம் அறிவுக்கு விருந்தாம். தமிழ்ப்பண்பாட்டின் நறுமணத்தை இம்மாலையில் நாம் நன்கு நுகரலாம். ஆசிய ஜோதி என்னும் நூல், ஆங்கிலத் திலிருந்து மொழிபெயர்த்துத் தமிழில் எழுதப் பெற்றது. இதனைப் படிப்பார்க்கு மொழிபெயர்ப் பாகவே தோன்ருது. மூல நூல் படிப்பதுபோலவே உணர்வு தோன்றும். இவருடைய மொழிபெயர்ப் புப் பாடல்கள் எல்லாமே இவ்வாறுதான் அமைந் திருக்கின்றன. பொதுவான கருத்துகளை வைத்துக் கொண்டு, தமிழ் மரபுக்கேற்ப இவர் பாடல்களை