பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக்குயில் தேசிகவிநாயகம் 45 ஒருசமயம் கவிமணி சிரங்கினல் பெருந் துன்ப முற்ருர். உடல் முழுவதும் சிரங்கு பரவியது. தொல்லை தாங்க முடியவில்லை. கவிஞர் அல்லற் பட்டாலும் அந்த வேதனை பாட்டாகவே எழுந்தது. துயரத்தையும் நகைச்சுவை பொருந்தவே இவர் வெளியிட்டார். இடுக்கண் வருங்கால் நகுக ! என்பதை நன்கு உணர்ந்த கவிமணி, நகைச்சுவை யுடன் வேதனையை வெளிப்படுத்திய அந்த வெண்பா இதுவே: முத்துப் பவழம் முழுவயிரம் மாணிக்கம் பத்திஒளி வீசு பதக்கமெலாம்-சித்தன் சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத் தரங்கண்டு தந்த தனம். . பதக்கமென்று சிரங்குகளைக் குறிப்பிடுகின்ருர். முத்து, பவழம், வயிரம், மாணிக்கம் முதலிய வற்றை வரிசையாகப் பதித்து வைத்த பதக்கமாம். அப் பதக்கம், இவருடைய தரங்கண்டு, சிரங்கப்ப ராயனல் கொடுக்கப்பட்ட பரிசாம். இதில் எவ் வளவு நகைச்சுவை பொருந்தியுளது! சிரங்கு திர இவர் மருந்துண்டார் ; உடலில் மருந்துகள் பூசினர். ஆயினும் சிரங்கு நீங்க வில்லை. அதற்கும் இவர் மற்ருெரு வெண்பாப் பாடினர் : உண்டமருந் தாலும் உடல் முழுவ தும்பூசிக் கொண்டமருந் தாலும் குணமிலேயே-மண்டு சிரங்கப்ப ராயா சினமாறிக் கொஞ்சம் இரங்கப்பா ஏழை எனக்கு. ” இத்தகைய அழகிய வெண்பாக்கள் பல பாடி பா. கு.-4