பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பாடுங் குயில்கள் யுள்ளார் கவிமணி. இவர் இயற்றிய பாக்களைப் படித்தால் இவரே நம்முடன் பேசுவது போல இருக்கும். ஈ. கவிமணியின் நல்லியல்புகள் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ஒரு சிறந்த கவிஞர்மட்டும் அல்லர் ; உயர்ந்த நற்பண்புகளுக்கு உறைவிடமாகவும் திகழ்ந்தவர். அப் பண்புகளை நாமும் தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்து கொள்வதுடன் நின்றுவிடாமல், அவற்றில் நம் மனத்தை ஈடுபடுத்தவேண்டும் முழுவதையும் பின்பற்ற முடியாவிட்டாலும் சிலவற்றையேனும் நாம் கடைப்பிடித்து நடக்கவேண்டும். அன்புள்ளம் கவிமணி என்னும் பெயரை நினைத்தவுடன், அன்பு, கருணை எளிமை முதலிய பண்புகள்தாம். நினைவுக்கு வரும். சிறியவர் பெரியவர், உறவினர். அயலார் என்னும் வேறுபாடில்லாமல் எல்லா ரிடத்தும் இவர் அன்பு செலுத்தும் இயல்புடை யவர். இவர் குழந்தைகளுக்காகப் பாடல்கள் இயற்றியதாலும், பெரும்பாலும் பெண்கள் ಗ್ದ யிலும் பெண்கள் கல்லூரியிலும் ஆசிரியப் பை புரிந்தமையாலும் இவரிடம் தாயன்பு மிகு திருந்தது. இந்த அ ன் பி ன் காரணமாகே பெரியோர் பலருடைய நட்பு இவருக்கு ஏற்பட்டது ரசிகமணி டி. கே. சிதம்பரநாதர், பேராசிரிய