பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிக்குயில் தேசிகவிநாயகம் 47 வையாபுரியார், செட்டிநாட்டரசர் அண்ணுமலை யார், தமிழறிஞர் சொ. முருகப்பஞர் போன்ற பெருமக்கள் இவர்பால் நன்மதிப்பும் பேரன்பும் கொண்ட நண்பர்களாயினர். தமிழர் நெஞ்ச மெல் லாம் இவர் தங்கி மிளிரக் காரணம் இவருடைய அன்புள்ளமே. - அருள் நெஞ்சம் உற்ருர் உறவினர் முதலியவர்களிடம் காட்டப் பெறும் ஆர்வமே அன்பு எனப்படும். உயர்தினை, அஃறிணை என்னும் வேறுபாடு கருதாது, எல்லா உயிர்களிடத்தும் காட்டும் இரக்கவுணர்வே அருள் எனப்படும். இவ்வருள் வடிவமாகவே கவிமணி யவர்கள் காட்சியளித்தார்கள். அன்பின் முதிர்ச்சி தானே அருள் ! அன்புள்ளம் படைத்த கவிமணி, அன்பு முதிரமுதிர அருள் உள்ளம் படைத்தவ ராஞர். இளம்பருவத்திலேயே இவர் அருள் நெஞ்சம் வாய்க்கப்பெற்றிருந்தார். கவிமணிக்குப் பதின்ைகு வயதிருக்கும். அப் பொழுது தேரூரில் உள்ள ஒரு கோவிலில் பூசாரி ஒருவன் ஒர் ஆட்டை வெட்டிப் பலி கொடுத்ததை இவர் நேரில் கண்டார். குருதி பீறிட்டுப் பாய்ந் ததையும், குருதியை அள்ளியள்ளி முகத்தில் பூவிக்கொண்டு பூசாரி வெறிவந்து ஆடியதையும் கண்ட தேசிகவிநாயகம் பதறிப்போளுர்; தெய்வத் நின் பெயரால் இப்படியும். ஒரு கொலைச்செயல் நடப்பதா என்று துடிதுடித்தார்; தமது நெஞ்சத் துடிப்பை யெல்லாம் ஒரு பாடலாகப் பாடிமுடித்