பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக்குயில் பாரதிதாசன் W I அக் காலத்தில் புதுச்சேரி பிரஞ்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்துவந்தது. அதனல் பள்ளிகளில் பிரஞ்சு மொழியே முதன்மையும், உரிமையும் பெற்றிருந்தது. அம் மொழியை நன்கு கற்றுவந்த சுப்புரத்தினத்திற்கு இயற்கையிலே தமிழார்வம் இருந்தது ; மேலும், இசையிலும் நாடகத்திலும் பற்று மிகுந்திருந்தது. அதனால் தமிழ்க் கல்வி நன்கு கற்க வேண்டும் என்னும் எண்ணம் இவருள்ளத்தில் மேலோங்கி நின்றது. தம் மகனுடைய எண்ணத்தை அறிந்துகொண்ட தந்தையார் அதற்குத் தக்க ஏற்பாடு செய்தார். o சுப்புரத்தினம் பள்ளிப் படிப்புடன் தமிழ்க் கல்வியும் பயின்றுவந்தார். இவருக்குத் தமிழ் கற்பிக்கும் பொறுப்பை ஏற்ற முதல் ஆசிரியர் பு. ஆ. பெரியசாமிப் புலவர் என்ற தமிழ்ப் பேரறிஞர் ஆவார். சுப்புரத்தினம் தமிழில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தமையால், தமிழ்க் கல்வி நாளுக்குநாள் வளர்த்துவத்தது. அடுத்து, இவர் புலவர் சி. பங்காரு என்பவரிடமும் தமிழ்க் கல்வியைக் கற்றுவந்தார். F புலவர் பங்காரு ஆசிரியரிடம் சுப்புரத்தினமும் வேறு மாணவர் சிலரும் தமிழ் பயிலச் சென்ற பொழுது, 'வப்போல் வளே' என்னும் ஆத்திசூடிப் பாட்டுக்குப் பொருள் கூறுமாறு ஆசிரியர் கேட் டார். வந்த மாணவருள் சுப்புரத்தினமே சரியான பொருள் கூறிஞர். அதனுல் ஆசிரியர்க்குச் சுப்பு ரத்தினத்திடம் தனி அன்பு உண்டாகியது.