பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பாடுங் குயில்கள் இலக்கியம், இலக்கணம், நிகண்டு முதலியவற்றை அவர் நன்முறையில் கற்பித்தார். அவற்றைச் செம்மையாகக் கற்றுவந்த சுப்புரத்தினம், கி. பி. 1908ஆம் ஆண்டு, கல்வே கல்லூரியில் தமிழ்த் தேர்வு எழுதினர்; புலவர் வகுப்புத் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்ருர். தந்தையார் பெயருடன் சேர்த்துக் கனக சுப்புரத்தினமாக இருந்த இவர் புலவர் சுப்புரத்தினமாக விளங்கினர். தொழிலும் மணமும் பு ல வ ர் சுப்புரத்தினம், காரைக்காலுக்குப் பக்கத்தில் இருக்கும் நிரவி’ என்னும் ஊரிலுள்ள அரசினர் பள்ளியில், தமிழாசிரியராகப் பணிபுரியத் தொடங்கினர். அப்போது இவருக்கு மாத ஊதியம் முப்பது வெண்பொற்காசுகள். நிரவியில் பணி யாற்றிக்கொண்டிருந்தபொழுது, இவர் புதுச்சேரிக் கல்வே கல்லூரிக்குத் தமிழ்ப் பேராசிரியராக மாற்றம் பெற்ருர், புலவர் சுப்புரத்தினம் நிரவியிலும் புதுச்சேரி யிலும் ஆசிரியப் பணியை மேற்கொண்டிருந்த காலத்தில், அழகிய சுவை மிக்க பாடல்கள் பல வற்றைப் பாடிவந்தார்; கடவுள் அன்பு, நாட்டுப் பற்று, ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ மனப்பான்மை இவற்றை அடிப்படையாகக்கொண்ட பாடல்களை அப்பொழுது எழுதிவந்தார். சுப்பிரமணியர் துதியமுது கதர்ப்பாட்டு , சமத்துவப் பாட்டு ' முதலியன அக் காலத்தில் இவர் எழுதியவையே. சுப்பிரமணியர் துதியமுதிலிருந்து சில பாடல்களை