பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக்குயில் பாரதிதாசன் 83 இவரே தம் வாயால் இனிமையாகச் சில சமயங் களில் பாடிக் காட்டுவார். தந்தையார் கனகசபை, சுப்புரத்தினத்துக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணினர் : தக்க இடத்தில் பெண் பார்த்தார். பரதேசி-காமாட்சி என்பவர்க்குத் திருமகளாகத் தோன்றிய பழநி யம்மாளே அந்தப் பெண். முறைப்படி திருமணம் நடந்தது. இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட பழநி யம்மாள், அன்பும் பண்பும் பொருந்தப் பொறுப் புடன், குடும்பத்தை நடத்திவந்தார். பாவலர் உள்ளம் குழந்தையுள்ளம் போன்றது. அந்த உள்ளத்திற்கேற்றவாறு, பழநியம்மாள் குறிப் பறிந்து ஒழுகிவந்தார். பாவலரும் தம் துணைவி யாரிடம் அன்பும் பரிவும் காட்டினர். எனினும், சில வேளைகளில், பாவலர் தமக்குள்ள இயற்கைக் குணத்தால் துணைவியார்க்கு மாருக நடந்து கொள்வார். அப்பொழுதும் அந்த அம்மையார் மனம் வருந்தாது, கணவர்க்கு வேண்டிய பணிகள் செய்துவந்தார்; அத் தொண்டிலே இன்பமுங் கண்டுவந்தார். இத் தம்பதியர்க்கு மக்கட் செல்வ மும் மனமகிழ வாய்த்துள்ளது. ஆ. பாரதிதாசன் பாரதியார் தொடர்பு தமிழ்நாடு பகுதி பகுதியாக ஆங்கிலேயரிடமும் பிரஞ்சுக்காரரிடமும் அடிமைப்பட்டுக் கிடந்ததைக்