பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாடுங் குயில்கள் கண்டு சுப் புரத்தினம் மனம் வருந்தினர்; தமிழர் தம்மை நினையாது, தாய்மொழியையும் கருதாது. உண்ணுதலும் உறங்குதலும் அன்றி வேருென்றும் அறியாது, உரிமையுணர்வு அற்றுக்கிடக்கும் நிலை யைக் கண்டு நைந்துநைந்து உருகுவார். பாவலர்கள் உணர்ச்சி வயப்பட்டால், அவ்வுணர்ச்சி பாடலாகத் தானே வெளிப்படும் இப்படி இவர் அடிக்கடி எழுதிய பாடல்களைப் பிறருக்குப் பாடிக்காட்டுவார். இச் சமயத்தில் சுப்பிரமணிய பாரதியார் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். ஆங்கிலேயர் பிடியினின்றும் நாடு விடுதலை பெறவேண்டும் என்று கருதிய பாரதியார், தம் பாட்டுத் திறத்தாலே வையத்தை விழிப்படையச் செய்துகொண்டிருந் தார். இவருடைய பாடல்களைக் கேட்டு, நாட்டு மக்கள் உள்ளங்களிலே, விடுதலை வேட் ைக கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. ஆங்கி லேயரின் அடக்குமுறை தாளமாட்டாமல், பாரதி யார் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். ஒருநாள் நண்பர் ஒருவரின் இல்லத்தில் திரு மனம் நிகழ்ந்தது. திருமணத்திற்குப் பாரதியாரும் வந்திருந்தார். சுப்புரத்தினமும் வந்திருந்தார். பாரதியார் வந்திருப்பது சுப்புரத்தினத்திற்குத் தெரியாது. திருமணத்தில் விருந்துக்குப் பிறகு நண்பர்கள் உரையாடிக்கொண்டிருந்தார்கள். அப் பொழுது சுப்புரத்தினம், பாரதியாரின் நாட்டுப் பாடல் ஒன்றை இனிமையாகப் பாடிக்கொண்டிருந் தார். இதனைக் கேட்ட பாரதியார் மனமகிழ்ந்தார்;