பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பாடுங் குயில்கள் பாரதியாரால், 'பாவலர்’ என்று பாராட்டப்பெற்ற சிறப்பை இவர் ஒருவரே பெற்ருர். இவ்வாறு பத்து ஆண்டுகளாகப் பாரதியாருடன் சுப்புரத்தினம் நெருங்கிப் பழகிவந்தார். அதனால் இவர் அவரைப் பற்றி நன்கு உணர்ந்துகொள்ள முடிந்தது. பாரதிதாசன் இருவரும் பழகிவந்தபோது, தம்மிடம் பாரதி யார் சங்க இலக்கியங்களைப்பற்றித் தெரிந்து கொண்டதாக இவர் கூறியிருக்கிரு.ர். பாரதியா ருடைய நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சாதி பேத மற்ற சமத்துவ மனப்பான்மை, வீர உணர்வு, பாட்டுத் திறம் இவற்றைக் கண்டு, சுப்புரத்தினம் அவரிடம் அளவுகடந்த ஈடுபாடு கொண்டார்; அந்த ஈடுபாட்டால் தமது பழைய கருத்தைபழைய நடையை மாற்றிக்கொண்டு புதிய கருத்து, புதிய நடை என்று பாடத் தொடங்கினர். எளிய நடையில், இனிய தமிழைப் புதிய பாங்கில் பாடு தற்கு வழிகாட்டியாகப் பாரதியார் விளங்கினமை யால் சுப்புரத்தினம், பாரதிதாசன்” என்று தமது பெயரையும் மாற்றி அமைத்துக்கொண்டார். பாரதியார் தமக்கு வழிகாட்டியாக விளங்கியதைப் பாரதிதாசனே,

  • பாடலில் பழமுறை பழநடை என்பதோர்

காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிர மணிய பாரதி தோன்றிஎன் பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினர்’ என்று பாடியுள்ளார்.