பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக்குயில் பாரதிதாசன் 87. அந்நாளில் பாரதியாரைப்பற்றி எழுதிய ஒருவர். அவர் உலக கவி அல்லர்’ என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது பாரதிதாசன் வெகுண்டெழுந்து, பாரதி யார் உலக கவியே என்று மறுப்பு ஒன்றினை எழுதினரென்பதிலிருந்து, பாரதியாரிடம் இவர் எவ் வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பது தெரியும். பாரதிதாசனுடன் நெருங்கி உரையாடிப் பழகியவர் களுக்கு நன்கு தெரியும் அந்த மதிப்பு. இ. புரட்சிக் குயில் சுப்புரத்தினம் பாரதிதாசனக மாறிய பிறகு, இவருடைய எண்ணத்தில் புரட்சி : சொல்லில் புரட்சி ; எழுத்தில் புரட்சி ; செயலில் புரட்சி ; சுருங்கக் கூறின் இவர் தோற்றமே புரட்சி. பகுத்தறிவுப் பாவலர் பாரதியாருடைய தொடர்பு பாரதிதாசனுக்கு ஒரு திருப்புமையமாக இருந்தது. அந்தச் சமயத்தில் பகுத்தறிவு இயக்கம் தமிழ்நாடெங்கனும் பரவிக் கொண்டிருந்தது. பாரதியாரால் எழுச்சி பெற். றிருந்த பாரதிதாசன் உள்ளத்தில், பகுத்தறிவுக் கருத்துகள் ஆழப் பதிந்து, முளைத்துச் செழித்து, வளர்ந்து, புரட்சிப் பாடல்களாக மனம் வீசத் தொடங்கின. சமுதாயத்திலே நிலவி வந்த குருட்டு நம்பிக்கைகளை இவர் தாக்கினர்; மூடப் பழக்க வழக்கங்களைக் கடிந்து பாடினர். கண்மூடி வழக் கங்களைச் சாடும் இவர் பாடல்களில் புயலின் வேகத் தைத்தான் காணமுடிந்தது.