பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-: R$ பாடுங் குயில்கள் பகுத்தறிவுப் பாவலராக மாறிய பாரதிதாக சிைன் பாடல்கள் அரசியல், பொருளியல், சமுதாயம் மூன்றிலும் பெரும் புரட்சியை உண்டுபண்னக் கூடியவைகளாக இருந்தன. அவர் நெஞ்சத்தி லிருந்து வெளிக்கிளம்பிய பாடல்கள், எரிமலையி லிருந்து வெளிவரும் திப்பொறிகளாகவே காணப் பட்டன. இடையிடையே வரும் கேலியும் கிண்ட அலும், அப் பொறிகளின் வெம்மையைச் சற்றே தணி வித்து இளஞ்சூடாக்கிவிடும். சமுதாய வழிகாட்டி சமுதாயத்தில் மண்டிக்கிடந்த பல கொடுமை களை இவர் கடிந்து பாடியதைப்போல் பிறர் பாட வில்லை என்றே கூறலாம். சாதிக்கொடுமைகளையும் போலிச் சமயக்கொள்கைகளையும் தகர்த்தெறியும் வெடிகுண்டுகளாகவே இவர் பாடல்கள் வெடித் தன. நம் நாட்டுப் பெண்கள் நிலையைப்பற்றிப் பாடிய பாடல்களில் காணப்படும் புரட்சிக் கருத்து களைப்போலப் பிறர் பாடல்களில் கானல் அரிது. குழந்தை மனத்தைக் கண்டு இவர் பொருமினர்; வயதுப் பொருத்தமின்றி நடைபெறும் திருமணங் களைக் கண்டு திடுக்கிட்டார் ; விதவை என்னும் பெயரால் இளம் பெண்கள் படும் இன்னல்களைக் கண்டு இரங்கினர். குமுறி எழுந்தது பாரதிதாசன் நெஞ்சம். மாதர் மறுமணத்தை இவர் வற்புறுத்திப் பாடினர். இவர் தாம் பிறந்த தமிழ்நாட்டை, தென்னட் டைக் கண்டுகண்டு மனங்கலங்கினர். மக்கள் அரசி