பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக்குயில் பாரதிதாசன் S9. யவில் அக்கறை காட்டாமல், சமுதாயச் சீர்கேடு களைச் சிந்தை செய்யாமல், அறிவை வளர்க்க ஆர்வம் இல்லாமல், மூடநம்பிக்கைகளுக்கு ஆட்டட் டுச் சீரழிகின்றனரே என்று எண்ணி எண்ணி ஏங்கினர். அந்த ஏக்கத்தை, தென்னுட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம் செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம் ! என வரும் இவர் பாடல் அடிகளிலே காணலாம் சோம்பிக் கிடந்த மக்களைத் தட்டி எழுப்பி, அவர்கள் எழுச்சிகொள்ளுமாறு இவர் பல பாடல் க3ளப் பாடினர். அெை: விசையொடுங்கிய தேகத்தில் வலிமை ஊட்டி, வீரமூட்டத்தக்கனவாக இரு ந் த ன ; எழுச்சியையும் உணர்ச்சியையும் உண்டாக்கும் வண்ணம் அமைந்தன. அப் பாடல் களைக் கேட்டு மக்கள் விழித்தெழுந்தனர் ; வீறு கொண்டு நின்றனர்; உலகை நிமிர்ந்து நோக்கினர். புரட்சிக் கவிஞர் அடிமை மனப்பான்மையில், தாழ்வு மனப் பான்மையில் ஊறிக்கிடந்து, நம்மால் என்ன ஆகும் என்று தன்னம்பிக்கையிழந்து தவித்த மனிதனே நோக்கி, அவனுக்கு எழுச்சியூட்டக் கருதி,

  • மனிதரில் நீயும்ஒர் மனிதன் , மண்னன்று ; இன்மதிற ! எழுந்து நன்ருய் எண்ணுவாய் ; தோளே உயர்த்து கடர் முகம் துக்கு ; மீசையை முறுக்கி மேலே ஏற்று என்று பாடினர்; அப்பொழுதும் மக்கள் விழிப்புற்று எழும் நிலையைப் பெருதிருந்ததைக் கண்டார்;