பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.)() பாடுங் குயில்கள் இனி இவர்களிடம் சொல்லிப் பயனில்லை : இளைஞர் கூட்டத்துக்குத்தான் உணர்ச்சியை உண் டாக்க வேண்டும் ; பழமையில் ஊறிப்போன நெஞ்சங்கள் திருந்தப்போவதில்லை என்று எண்ணி ர்ை; அதல்ை, இளைஞர் கூட்டத்துக்கு வீரமுரசங் கொட் டினர்.

  • பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு

திறக்கப் பட்டது சிறுத்தையே வெளியில் வா சிம்புட் பறவையே சிறகை விரி; எழு ; சிங்க இளைஞனே திருப்பு முகம் , திற விழி . என்று எழுச்சிக் குரல் கொடுத்தார். நாடெங்கும் இளைஞர் படை திரண்டெழுந்தது. எங்கும் உணர்ச்சி ! எங்கும் எழுச்சி ! இவ்வாறு தமிழகமெங்கும் உணர்ச்சியும் எழுச்சியும் உண் டாகப் புரட்சிக் கருத்துகளைப் பாடி வந்தமை யால் மக்கள், பாரதிதாசனைப் புரட்சிக் கவிஞர். என்று வழங்கத் தொடங்கினர். எல்லாருடைய நெஞ்சங்களிலும் புரட்சிக் கருத்துகள் அரும்பு விட்டன. புரட்சிக் கவிஞரின் புகழும் மணக்கத் தொடங்கியது. மக்கள் பாராட்டு தமக்கு விழிப் புணர் வூ ட் டிய புரட்சிக் கவிஞரைப் பாராட்டவும் நன்றி செலுத்தவும் கருதித் தமிழக மக்கள் திரண்டெழுந்தனர்; பெரு நிதி திரட்டித் தருவதென்றும் முடிவு செய்தனர். "அறிஞர் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட வரும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் திகழ்ந்து