பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக்குயில் பாரதிதாசன் 91 மறைந்தவரும் ஆகிய மாமேதை அண்ணு அவர் களே முன்னின்று நிதி திரட்டினர் , தமது பேச் சாலும் எழுத்தாலும் இருபத்தையாயிரம் ரூபாய் திரட்டினர். 1946ஆம் ஆண்டு, சென்னை மாநகரில், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாராட்டுக் கூட்டம் நடந்தது. வெள்ளம்போல் தமிழர் கூட்டம் திரண்டு வந்தது. சொல்லின் செல்வர், பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை, வீரத் தமிழர் ப. ஜீவானந்தம் போன்ற பெருமக்கள் பலர் பாராட்டிப் பேசினர். சுருங்கக் கூறின், பிற்காலத்தில் அடையவேண்டிய சிறப்பு, பெருமை, புகழ் அனைத்தையும் தம் வாழ்நாளிலேயே புரட்சிக் கவிஞர் பெற்றுவிட்டார் என்னலாம். புரட்சிக் குயில் புரட்சிக் கருத்துகளை மக்களிடையே பரப்ப எண்ணிய காரணத்தாலும், அவற்றை எழுத வேண்டிய பணி மிகுதியாக இருந்ததாலும் புரட்சிக் கவிஞர், 1946 ஆம் ஆண்டு தமது ஆசிரியப் பணியி லிருந்து விலகிக்கொண்டார்; அதன் பின்னர், 1948இல் குயில் என்னும் திங்கள் இதழைத் தாமே தொடங்கி நடத்திவந்தார். இதழ் முழுவதும் பாடல்களாகவே இருக்கும்; புரட்சிக் கருத்து களையே தாங்கிவரும். முதன்முதல் முழுதும் பாடல்களாகவே வெளிவந்த இதழ், இந்தப் புரட்சிக் குயில்தான்.