பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பாடுங் குயில்கள் அழகின் சிரிப்பு என்னும் நூல் பாரதிதாசன் உலகப் பெருங் கவிஞர் என்பதை உலகிற்கு உணர்த்தும். கிளி, புரு, கடல், ஆறு, ஆலமரம் முதலான தலைப்புகளில், இயற்கைப் பொருள்களைப் பற்றி இவர் இந் நூலில் அழகாகப் பாடியிருக்கிரு.ர். பாவலர்களுடைய கண்களுக்கு ஒரு தனி ஆற்றல் உண்டு. எப்பொருளையும் ஊடுருவிச் சென்று காணும் ஆற்றல்தான் அது. அதனல் நமக்குப் புலனுகாது மறைந்துகிடக்கும் அழகுகள், அவர் களுடைய விழிகளுக்குப் புலனுகும். அவ்வாறு புலனுகும் அழகுகளே அவர்கள் கண்டு தாமும் சுவைத்து, நம்மையும் சுவைக்கவைத்து மகிழச் செய்வார்கள். பாரதிதாசன் இவ்வாறு சுவைத்து எழுதிய அழகின் சிரிப்பு: நம்மையும் இயற்கை பழகிலே தோயவைக்கின்றது. இசையமுது என்னும் இப் பெயரைக் கேட்ட வுடனே, இந் நூலின் இனிமை நமக்குப் புலப் படுகின்றது. இசையே இனிமையானது; அதுவும் அமுதாகப் பொழிந்துவிட்டால் இனிமைக்குக் குறைவேது? தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாரதிதாசன் பாடினர். அவருடைய இசைப் பாட்டுக்கும் அமுதென்று பேர் என்று நாம் பாட லாம். அவ்வளவு இனிமையான இசைப் பாடல்கள் இந்த நூலுக்குள் அமைந்திருக்கின்றன. இவர் புரட்சிக் கவிஞராதலின், மாடு மேய்ப்போன், வண்டி ஒட்டுபவன், ஆலைத் தொழிலாளி, கூடை முறம் பின்னுவோர் என்று இத்தகைய மக்களையே இசை