பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

பாட்டரங்கின் கவி நிதியே! தமிழர் வாழ்வின்
       பண்பாட்டை நல்வளத்தைப் பேணிக் காக்கும்
நாட்டரங்கின் பெருநிதியே! முத்து வேலர்
       நன்னி தியே! நாநிதியே! அஞ்சு கத்தின்
வீட்டரங்கக் கருநிதியே! கலைஞர் ஏறே!
       மேன்மைமிகு நன்னிதியே! எனது பாடல்
கேட்டரங்கம் சிறப்பிக்க வந்த ஆன்ற
       செந்தமிழர் முதலமைச்சே! வாழ்க நீடே!

(வேறு)


கவியரங்கப் பெருந்தலைவ! கற்றறிந்த மேலோய்!
       கத்துகடல் தமிழகத்து முதலமைச்சே! இந்தப்
புவியரங்கப் பெரியோரே! தாய்மாரே! ஆன்ற
       புலவர்காள்! பொன்னமரா வதிமன்றிற் சூழ்ந்து
செவியரங்கில் தீந்தமிழைத் தாய்மொழியை இன்பச்
       செந்தேனைப் பாய்ச்சுகின்ற கவிக்கூட்டத் தோரே!
கவியரங்கில் என்பாட்டைப் பாடுதற்கு முன்னர்த்
       தலை தாழ்த்திக் கைகூப்பி நான்வணங்கு வேனே!

வான்தோன்றி மலைதோன்றி மலைமுகட்டில் மோதும்
       வளிதோன்றிக் கடல்தோன்றிக் கடலிடையில் நீண்ட
கூன்தோன் றிச் செங்கதிரும் முளை மதியும் தோன்றிக்
       குளிறடைந்த மண்தோன்றி உயிரினங்கள் தோன்றிக்
கான்தோன்றி நீளாற்றங் கரையினிலே வாழ்ந்தோர்
       கடும்பசிக்குப் போராடி உழைத் துவழி கண்ட
தேன்தோன்றும் உழவனை நான் பாடுகின்றேன் உம்முன்!
       தெள்ளு தமிழ் நாட்டீரே! கேட்பீரென் பாட்டை!

காடுவெட்டி நிலந்திருத்திப் புற்பூண்டு நீக்கிக்
       கரைகட்டிச் செந்நெல்லின் விதையெடுத்து வந்து
மாடுகட்டி நீர்தேக்கி வயலுழுது வித்தி

       மலைக்காட்டு மானினமும் மரக்கிளையில் தொங்கும்