பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர்

அவையடக்கம்

(எண்சீர் விருத்தம்)

மண்ணகத்துத் தாதறிந்து வாரித் தேக்கி
       வகைவகையாய்ச் செப்பனிட்டுப் பொன்னுண் டாக்கி
விண்ணகத்து மின்னணுவை வள்ளல் போல'
       மேன்மேலும் பலதுறையில் வழங்கி நாட்டுப்
பண்ணகத்து வளஞ்சேர்க்க உழைக்கும் ஆன்ற
       பலதுறையில் வல்லோரே! நல்லோ ரே!என்
கண்ணகத்து நெய்வேலி மக்காள்! உம்மைக்

       கைகூப்பி வாணிதாசன் வணங்கி னேனே!

நெய்வேலி முத்தமிழ் மன்றம் வாழ்க!
(அறுசீர் விருத்தம்)

மெய்வேலி இல்லாப் போழ்தும்
       வெற்றியை விளைத்தார் ஒத்த
நெய்வேலி அறிஞர் கண்ட
       முத்தமிழ் மன்றம் நீண்ட
வைவேலி நிறைத்துக் காக்கும்
       காவிரி மடையோ ரத்துச்
செய்வேலி போற்ற ழைத்தே

       சீருடன் வாழ்க நீடே!

[‘பாரதியும் பாரதிதாசனும்’ என்னும் தலைப்பில் பதினாறாவதாக - இந்நூலில் (பக்கம் 88-90] இடம்பெற்றுள்-