119
வள்ளுவனார் தந்த வளமார் திருக்குறளை [துண்டோ?
வெள்ளம் அழிப்பதுண்டோ? வெந்தணல் தான் தீய்ப்ப
முப்பாலுக் கேற்றநல் மூதுரைபோல் எங்கேனும்
இப்பால் எழுந்ததுண்டோ? எந்நாட்டும் இல்லை!
அறிவின் புரட்சி, அகப்புரட்சி, வாழ்க்கை
நெறியின் புரட்சி நிரல்படுத் தித்தந்த
பொய்யா மறையாம் குறளைப் புரிந்தார்க்கு
வையகத்தில் என்ன குறை? வாழ்க்கை வளமாம்!
‘குறள்கற்றோர். முன்னர் விரல் நீட்டல் கூடா’
அறவுரை; ஆன்றோர் பழமொழி! யார்மறுப்பார்?
‘என்னுண்டாம் உங்கள் இனிய திருக்குறளில்?’
என்றெனைக் கேட்க எவர்வந் திடினும்
உலகப் பொருட்கள் உளவென் றுரைப்பேன்!
நிலையில் அறிவை நிலையாய் நிறுத்தும்
கலைபயில் கூடக் கணக்கன் குறளே!
விலையில் பெருநிதி வீசிடு வள்ளலே!
நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல அறநெறியைக்
காட்டியதார்? வள்ளுவனார் கண்ட திருக்குறளே!
ஒன்றேமுக் காலடியில் ஓதப் பெருங்கடலை
இன்றெவர் தாம் உள் நிறைக்கும் ஏற்றம் உடையார்காண்!
கீதை எனவுரைப்போர் செஞ்சொல் திருக்குறளை
ஓதி உணர்ந்தபின் ஒப்புவரோ கீதையினை?
வல்லிருளைப் போக்கும் நீள் வான்சுடரே முப்பாலாம்!
நல்லறிவை, நன்னெறியை நாளும் நமக்குணர்த்தித்
தொல்லை களையும் நற் றோழன் திருக்குறளே!
இல்லத்து மக்கள், இனிய மனையாட்டி
ஊட்டாத இன்பம் திருக்குறளில் உண்டென்பேன்!