பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

முடிவுரை
(அறுசீர் விருத்தம்)

இங்குள்ள உயிரின் மேலாம்
      என்னருங் கவிச்செல் வங்காள்!
உங்களுக் கறியா தொன்றை
      உணர்த்துவன்! உண்மை; உண்மை!
தெங்கிளம் நீர்போல் நல்ல
      தீஞ்சுவைக் கவிதை பாடி
மங்கிய உங்கள் வீட்டின்
      வறுமையைக் களைந்த துண்டோ?
மூவேந்தர் வாழ்ந்திருந்த
      முன்னாளில் தமிழ்ப்பொன் னாளில்
காவேந்து கருமை நெல்லி
      தனக்கின்றி ஒளவைக் கீந்தான்!
சாவேந்து முரசு சட்டில்
      தன்னிலே கண்ண பாந்த
பாவேந்தர்க் காக மன்னன்
      பனையோலை விசிறி யேற்றான்!
கம்பனுக் காக அந்நாள்
      சடையப்பன் கடைதி றந்தான்!
செம்பொனைத் தந்தான் நாய்க்கன்.
      சிறுகாதல் தூதைப் பாட
வெம்பினான் பின்னால் வந்தோன்
      வெற்றிலைக் கில்லை யென்றே!
அம்பொத்த கவிதைக் கின்றோ
      பார்காசு தரவல் லார்கள்?
பாரதி என்றே வாயால்
      பறைசாற்று கின்றார்! அந்தப்
பாரதி வாழ்ந்த நாளிற்

      பசிப்பிணி களைந்தார் உண்டோ?