121
பாரதி தாசன் வாழ்விற்
பணத்தினிற் புரண்டா வாழ்ந்தார்?
ஊரறி செய்தி! நாமும்
ஊருக்கே உழைக்க வந்தோம்!
கட்டுரை, நீண்ட நல்ல
கருத்தில்லாக் கதைகள் தீட்டிப்
பட்டுறை மேனி போர்த்து
வாழ்கின்றார் நலமே! இன்னோர்
தொட்டுப்பார்த் தது தான் உண்டோ
தொன்னூலை, இலக்க ணத்தை?
விட்டிடு கவிதை யாத்தல்
எனவென்றும் விளம்பேன் யானே!
இருளினை ஓட்ட இல்லில்
ஏற்றிய அகல்வி ளக்கின்
திரியினை ஒத்தோம் நாமே!
தீய்ந்தாலும் கவலை வேண்டாம்!
மருளினில் வாழு கின்ற
மக்களின் வாழ்வை என்றும்
உருப்பெறச் செய்தால் நம்மின்
ஒண்போருள்! போதும்! வாழ்வோம்!
நம் தொழில் அது தான் தம்பி!
நாம்யார்க்கும் அடிமை யல்லோம்!
உம்மி4யும் கிடைக்காப் போழ்தும்
ஊருக்கே உழைத்து வாழ்தல்
இம்மையிற் கிடைத்த பேறாம்!
இது போதும்; போதும் தம்பி!
செம்மையாய் ஈன்ற அன்னைத்
◯