உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நாள்: 17-8-1959. இடம்: புதுவை நகர மன்றம்-புதுவை வள்ளுவர் விழாக் குழுவினரால் நடத்தப்பெற்ற வள்ளுவர் ஈருயிரம் ஆண்டு விழாக் கவியரங்கம். தலைவர்: புதுமைக் கவிஞர் திரு. வாணிதாசன். தலைப்பு: ஒரு குறள் நிகழ்ச்சி. குறிப்பு: இவ்விழாவில் புதுவை அரசின் கல்வியமைச்சர் மாண்புமிகு எஸ். ஆறுமுகம், பி. காம், அவர்கள் வள்ளுவர் திருவுருவத்தைத் திறந்து வைத்துப் புதுமைக் கவிஞரைப் பாராட்டினர். 1. புதுவை மாநிலக் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ். ஆறுமுகம், பி. காம். 2. வதுவை-திருமணம். 3. "எண்ணுன்கு முப்பத் திரண்டுபல் காட்டி இதழ் நடுவே பண்ணுகச் செந்தமிழ் பாடிவந் தாலும் இப் பாரிலுளோர் அண்ணுந்து பார்ப்பர்; அழகழ கென்பர்! அதன்பிறகோ சுண்ணும்பு பட்ட இலையும் கொடார்கவி சொன்னவர்க்கே!” என்னும் தனிப்பாடல் கருத்தை இங்கே காண்க. 4. உம்மி-உமி; சிறிதளவு.