பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 ஏழைக்குப் பெருவாழ்வும் இல்லாத ஏழை ஈன்றெடுத்த பிள்ளைக்கும் இங்கிந்த நாட்டுக் கூழைக்கும் பெருவாழ்வு கொடுத்தளித்தே வாழ்க்கைக் குலம் தழைக்கச் செய்வதுதான் விடுதலையின் போக்காம்! பேழைக்குள் பெருஞ்செல்வம் பேணிவந்த செல்வர் பிறர்துயரம் காணுத பிற்போக்குக் கும்பல் வாழவைக்கும் நோக்கல்ல விடுதலையின் நோக்கம்! மாற்ருரும் மற்ருேரும் வாழ்வதுவே நோக்காம்! நாமார்க்கும் அடிமையல்லோம்; நமனையும் நாம் - (அஞ்சோம்: நம்மினத்து மனிதகுலம் எந்நாட்டில் நொந்தே ஊமையைப்போல்இருந்தாலும் உயிர்கொடுத்துக்காப்போம்! உயிரினத்தின் பிறப்புரிமை விடுதலையாம்! வாழ்க! ஆமையைப்போல் ஐந்தடக்கி அறிவுவளம் பெற்றே அடிமைவிலங் கொடிப்பதுதான் விடுதலையின் நோக்கம்! நாம் நமையே ஆண்டிடுவோம்! நல்லறிஞர் போற்றும் நல்வாழ்வு விடுதலையே! மனிதவின வாழ்வே! O пътеir: 15-8-1970 இடம்: புதுவை வானொலி நிலையம்-விடுதலை நாள் விழாக் கவியரங்கம். தலைப்பு: விடுதலை,