உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26. சித்திரைச் செல்வி

அவையடக்கம்

தனதன தான தனதன தான
தனதன தான தனதான-என்னும் வண்ணப்பாட்டு

கடலலை தாவிக் கரையினில் மோதக்
கழியினில் பூத்த மலரோடே
இடையிடைக் கொஞ்சி இதழ்விழி மூடி
இசையினை மீட்டும் மதுவண்டே!

கரையினில் நீண்டு கமழ்மணம் கூட்டும்
கருங்கிளைக் கொன்றைப் புதுப்பூவே!
இரையினைக் கெளவ மறைவினில் தங்கும்
எழில்மிகு தாழைப் பெருங்கொக்கே!

மறைபயில் ஆன்ரறோர் மலர்விழிப் பெண்கள்
வாய்மொழி கேட்கும் மணிக்கூண்டே!
குறைவிலாச் செல்வம் அணிமணி மாடம்
குளிர்மலர்ச் சோலை வருங்காற்றே!

புதுவையை நாடிப் புதுமலர் தேடிப்
பொரிமிகு வண்டும் பலபேரும்
இதுவரை இங்கே வருவது கண்டோம்!
புதுக்களி நாட்டம் பிறிதுண்டோ?

இதுவரை எங்கள் புதுவையைப் போல
இருந்தது கண்டால் இயம்பீரே!
புதுமையை நல்கும் புதுவையில் வாழும்
பொதுவறி வாக்கப் பெரியீரே! -