142 திருமகளே! நீ வாழ்க! (எடுப்பு) தேனின் சுவைகூட்டும் செந்தமிழ் இசைமீட்டும் சித்திரைச் செல்வியே! வாழ்க!-எங்கள் திருமகளே! நீவாழ்க!-வாழ்க! (தொடுப்பு) வேனில் எனப்பிறந்தாய்; விரிவான் ஒளிசேர்த்தாய்!-இள வேனில் எனப்பிறந்தாய்; விரிவான் ஒளிசேர்த்தாய்! மானின் விழியிலுன் மலர்விழியைப் புதைத்தாய்! - இள மானின் விழியிலுன் மலர்விழியைப் புதைத்தாய்! (முடிப்பு) முல்லை நகை காட்டிக் கொல்லே மலர்சிரிக்கும்!-உன்முகம் முல்லை நகை காட்டிக் கொல்லே மலர்சிரிக்கும்! முதிர்ந்த பலாவாழை உன்னிதழ் விருந்துாட்டும் - தோப்பு முதிர்ந்த பலாவாழை உன்னிதழ் விருந்துாட்டும்! - எல்லேயிலா இன்பம் எங்கும் நிறைந்திருக்கும்! - நல் எல்லையிலா இன்பம் எங்கும் நிறைந்திருக்கும்! இன்னிசைக் குயில்பாட இளந் தென்றற் காற்ரு கும்-எங்கும் இன்னிசைக் குயில்பாட இளந்தென்றற் காற்ருகும்! தொழிலின் பெருக்காலே எழிலின்பெருக்கம் உண் - டாம்!-கைத் தொழிலின் பெருக்காலே எழிலின் பெருக்கம் உண்டாம்! மொழியின் பெருக்காலே விழியின் பெருக்கம் உண்டாம்!-பன் மொழியின் பெருக்காலே விழியின் பெருக்கம் உண்டாம்!
பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/143
Appearance