143 வழிவழியே முயன்ருல் வாழ்வின் பெருக்கம் உண்டாம்ஆன்ற வழிவழியே முயன்ருல் வாழ்வின் பெருக்கம் உண்டாம்! கழிபே ருவகை உண்டாம் நம்நாடு பொன்னடு காப் - போம்!-நற் கழிபேருவகை உண்டாம் நம்நாடுபொன்னடுகாப்போம்! சித்திரைச் செல்வியின் திருமணம் (எண்சீர் விருத்தம்) செவ்வாயும் அகன்ருேடும்; புதன்வந்து தோன்றும்; திசைகிழக்கில் மையிருட்டின் கருமைநிறம் மாறும்; எவ்வாயும் குளிர்காற்றுப் புரண்டெழுந்து வந்தே இன்னுமா உறக்க?"மென்றே எள்ளாமல் எள்ளும்; தெவ்விருட்டுப் பின்வாங்கும்; சில்வண்டு வீட்டுச் சிறுகூரை முணுமுணுக்கும்; செடிகொடிகள் மீது கெளவையிலாச் சிட்டிணைகள் அங்குமிங்கு மாகக் கவின்காலைத் திருப்பள்ளி எழுச்சிப்பாப் பாடும்! புத்தாடை மணமக்கள் பூரிப்பைப் போலப் புலர்காலை வீச்சொளியில் மரஞ்செடிகள் பூக்கும்; எத்திசையும் பூநாற்றம்; எங்கெங்கும் பெண்கள் இணைவிழிபோல் கயல்புரளும் குளம்நோக்கிச் செல்வர்; முத்துப்பல் சிரிப்பொலியில் நீர்மூழ்கி ஆடி முன்பின்ளுய்க் குடத்தினிலே நீர்மொண்டு துக்கி அத்தானின் நகைப்பேச்சைச் சிரித்தெண்ணிக் கொண்டே ஆடுமயில் போலசைந்தே மலேநோக்கி மீள்வர்! இல்லத்தைத் தூய்மைசெய்வர்; இல்லத்தின் முன்னர் எழில்தேங்க மாக்கோலம் இட்டிடுவர் பெண்கள்; கொல்லையிலே குலைவிட்ட வாழைமரத் தோடு குருத்தோலைத் தோரணமும் மாவிலையும் கட்டி
பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/144
Appearance