உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

முல்லைப்பூ மாலையிட்டுச் சந்தனத்தைப் பூசி
      முகப்பழகு செய்திடுவர் தெருவாழும் மக்கள்;
பல்வளமும் பெருகவெனச் சித்திரைப்பெண் மன்றல்
      பாப்பாடிக் கைகொட்டி ஆடிடுவ ராமே!

பெருந்தென்னை மட்டைகளும், மட்டைகளைத் தாங்கிப்
      பிடித்திருக்கும் கொடிமரமும், அழகூட்டும் நீண்ட
தெருவெல்லாம் காற்றாடு பூஞ்சோலை. போலச்
      சீர்மிகுந்து கொண்டிருக்கும்; தெருத்திண்ணை யோரம்
வருவோர்கள் போவோரிகள் வாய்குழைந்த பேச்சு
      மலர்த்தேனின் சுவை;4 சாதா ரணமல்ல! இங்கே
உருமாறி விரோதியென வந்தமாப் பிள்ளை
      உலகத்துப் பெரும்பகைக்குப் பகையன்றே கொள்வோம்!

மங்கலவாழ்த் தலையொலிக்கும்; வரிக்குயில்கள் பாடும்;
      மலர்ச்செடிகள் பூச்சொரியும்; அருவிமுழ வார்க்கும்;
தங்கநிற விடிவெள்ளி மாப்பிள்ளைத் தோழன்,
      தங்கையாம் சித்திரைக்குத் தகுந்தமண வாளன்
மன எங்குள்ளான் எனத்தேடத் தொடுவான் மீதில்
      எழுந்திருந்தான் செங்கதிரோன்! மணமக்கள் வாழ்க!
‘செங்கையாள் சித்திரைக்கு விரோதிமண வாளன்’,
      சிரித்தார்கள் என்றாலும் வாழ்த்துரைத்தார் மக்கள்!

கடந்தோடிப் போய்விட்ட நாளெல்லாம் சாதா
      ரணநாளாய் எண்ணியெண்ணிக் கவலை கொள்ளும்
நடக்கின்ற திருமண நன் னாள்மறப்ப தில்லை; பெண்கள்
      நம்நங்கை சித்திரைப்பெண் இதில் விலக்கா? சொல்வீர்!
இடக்கையால் மணவாளன் தன்கையைப் பற்றி
      எழுந்துவலம் வருகையிலே மெய்துடிக்கப் பள்ளி
நடந்துபின் தோழியோடு பேசுகின்ற இன்ப

      நயங்கண்டாள்; கடைக்கண்ணால் ஆளனையும் கண்டாள்!