பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 மனமக்கள் வரவேற்பு மன்றத்து மாப்பிளையை வரவேற்கும் போது மாமியார்க்கே கொண்டாட்டம்; மாமனுக்கஃ(து) - (இல்லை! இன்றுள்ள நிலையிதுவாம்! இதில்தொக்கி நிற்கும் | இ இன்பத்தை யாரறிவார்? அதுபெண்டிர் செய்தி! 片 கொன்றைமரம் பூச்சொரியும்; குலைவாழை தாழும்: குளத்தினிலே இளநாகு தலைமூழ்கி நீந்தும்; 慈 அன்றலர்ந்த தாமரைப்பூ|தலையாட்டி வாழ்த்தும்; |து சித்திரைப்பெண் அழைத்துவந்த விரோதியினைக் . (கண்டே! மணப்பெண்ணே மாப்பிளேயை வரவேற்க ஒவ்வோர் வாயிலிலும் பல்லோர்கள் சூழ்ந்திருக்கக் கண்டோம்; மணப்பெண்ணின் முழுத்தோற்றம் இளவேனில் - (தோற்றம்: வாய்ச்சிரிப்பை முல்லைமலர் பாய்விரித்துக் காட்டும்; இணையிதழ்கள் செவ்வல்லி, பன்மலர்த்தேன் மாந்தும் இனத்தாரைப் போல்வண்டு எழுந்திசைத்துப் பாடும்: துணையில்லார் மூச்செரிவர், விரோதிக்கு வாய்த்த தூயதமிழ்ச்சித்திரைப்பெண் தோற்றத்தைக்கண்டே! தாமரையைப் போன்றமுகம்; தாமரையே கண்கள்: தண்கடலின் அலேகூந்தல்; பிறைத்திங்கள் நெற்றி: காமருவு தெங்கிளநீர் கவின்மிகுந்த மார்பு; கடந்தவரும் தெங்கிளநீர் கண்டொதுங்கல் இல்லை! மாமருவு நீள்மலைமேல் வளர்ந்திருக்கும் மூங்கில் 譬 களிறுக்கு வளைத்தூட்ட வரும்பிடிபோல் இன்று ! ') தேமருவு சித்திரைப்பெண் நடந்துவரக் கண்டோர் . கிறுகிறுப்பை ஊர்மக்கள் தெருச்சிரிக்க வைத்தாt! 10