பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சித்திரையைக் கண்டோர் நிலை கைநீட்டிப் படியேறி வருகின்ற ஏழை கண்குளிர மனம்குளிர எச்சிக்கை ஒட்டா வைநீட்டி நெல்லளந்து கிடங்கறையில் வைத்து மற்றவர்க்கும் வழங்காது தானுண்ணுக் கஞ்சன் மெய்சிலிர்க்க உளங்குளிர வீசுகின்ற இன்சொல் (கண்டு மெல்லிடையாள் சித்திரைப்பெண் இடைகுலுங்கக் "வைகுதலை வெறுத்தாரும் வைகுதலும் உண்டோ? வைகுதலும் உறங்காரே! வையத்து வாழ்க்கை! திருவாய்க்கே அவல்கிடைக்காப் போழ்தெல்லாம் வேறு சிற்றுமியை மெல்கின்ற வாயாடிப் பெண்கள் செருக்கான விரோதி யாடு சேர்ந்துவரு கின்ற சித்திரைப்பெண் நிலைகண்டு கண்சிமிட்டிக் கொண்டு வருகின்ற ஆண்டெல்லாம் துணிமாற்றல் போல மணவாளன் மாற்றுகின்ருர் கூத்தென்று சொன்னர்; ஒருபெண்ணுே, இல்லையில்லே, பாஞ்சாலி என்ருள்! உரையாடல் கேட்டிருந்த விருந்தினர்கள் சிரித்தார்! ஐயாறு முப்பதென்பர்; அதையிரட்டி வைத்தால் அறுபதென்பர் வாய்பாட்டை மனப்பாடம் செய்தோர்! "கைவைத்தும் கால்வைத்தும் கலங்காத ஊற்றுக் காணருவி சித்திரைப்பெண் ஆண்டுகள் ஒவ்வொன்றும் பொய்யாகிப் போகவில்லை; மனமாலை சூடிப் புத்தாண்டுக் கன்னியென்றே பொலிகின்ருள்:இந்த வையத்தில் அறுபதுபேர்க் கவளொருத்தி யாளுள்! கைகாரி' என்ருெருத்தி வாயூறிப் போளுள் பெண்விரும்பா விட்டாலும் கட்டாயமாகப் பேசிமணம் முடிக்கின்ற பெற்ருேரைப் போலக் கண்கெட்ட செருக்கான விரோதிக்கே இந்தக் களிமயிலேச் சித்திரையை மணம்பேசி வைத்தார்;