பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157

(அறுசீர் விருத்தம்)

கள்ளத்தை மனத்தில் காத்துக்
        கருத்தினை மறைத்துக் கொண்டால்
உள்ளமே சிரிக்கும்; அந்தோ!
        உப்பிலா வாழ்க்கை யாகும்!
உள்ளத்தைத் திறந்து பேசல்
        உயர்குணம்; புகழும் உண்டாம்!
தெள்ளரும் வித்தை கற்றோர்
        செயலிதாம்; போற்று வோமே!

முடிவுரை


செல்வர்காள்! தீந்தமிழின் சிறப்பெண்ணும் பெரியீரே!
நல்லவர்காள்! நமது தமிழ் நாடாளும் அரசினரே!
வல்லவர்கள் தமிழ்மக்கள்; வருவிருந்தை நனியேற்றுப்
பல்வளமும் நிறைந்திருந்த பழந்தமிழைப் பறிகொடுத்தார்!

ஒண்டவந்த பிறநாட்டார் உயிர்க்கஞ்சும் கோழைகளைக்
கண்டிருந்தும் நடிகை கால்களெலாம் சோர்ந்தனவோ?
அண்டவந்தோர் நமை அழித்தார்; அறிவிழந்து நிற்கின்றோம்!
பண்டிருந்தபழம் பெருமை பகைவீழ்த்தும் தோளெங்கே?

தென்னிலங்கை இராவணனைச் செழுவளத்து முடியரசை
முன் நினைத்தால் முனைப்பேறும்; முதுகுக்கூன் முறுக்கேறும்;
என் குலத்தீர்! புதுவைவாழ் என தருமைத் தாய்மாரே!
பின்குலத்தார் சிரிக்கின்றார்; பிறர்பழிக்க வாழ்வதுவோ?

நாமே தான் நடந்துவழி நலஞ்சேர்க்கும் நயமுடையார்
தேமதுரத் தமிழுக்குத் திரண்டுள்ளோம்; இராவணனின்
மாமதுரத் தமிழ்பாட மறந்தோர்க்கும் நினைவுறுத்தப்

பூமதுரப் புதுவை நகர் முதன்முறையாய்ப் போற்றுதுவே!