இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
158
மக்கட்கும் நமதருமை மகவுக்கும் இராவணனின் மிகு
மிக்கபுகழ்ப் பெயர்வைப்போம்; விழாவெடுப்போம்; அறிவு
தக்கோரை அழைத்திங்கே தமிழ்வளர்ப்போம்; அதுவே நம்
அக்கறையாம்; தன்மானம் அரசோச்சும்; வாழ்வோமே!
(அறுசீர் விருத்தம்)
இதுவரை எனது பாடல்
என தரும் கவிஞர் பாடல்
புதியன கூறக் கேட்டுப்
பூரித்தீர்; புதுவை மக்காள்!
வதுவையில் மகிழும் நல்ல
மணமக்கள் போல என்றும்
புதுமையை ஏற்றீர்! நன்றி!
◯
நாள்: 6-6-1971 ஞாயிறு காலை 8-30 மணி.
இடம்: நகர மன்ற அரங்கம் (ஒதியஞ்சாலை), புதுவை. இராவணன் விழாக் கவியரங்கம்.
தலைவர்: கவிஞரேறு வாணிதாசன்
தலைப்பு: ‘உள்ளந் திறந்து பேசட்டும்.’
1. காழ்—முளை;