பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

காண்கின்ற பொருளெல்லாம் கண்கவர்வ தில்லை
கடல்நீரில் கரித்தலில்லா நீர்கண்ட தில்லை
பூண்கின்ற அணியெல்லாம் பொலிவூட்டல் இல்லை
பூக்கின்ற பூவெல்வாம் மணம்கூட்டல் இல்லை
ஆணென்ற ஆணெல்லாம் ஆணாவ தில்லை
அதுபோல விளைவெல்லாம் விதையாவ தில்லை
மாண்பான விளைவினிலே விதைபொறுக்கித் தேடி
வைப்பது தான் நல்லுழவன் முதற்கடமை யாகும்.

கண்ணுக்குக் கண்ணாய்நீ கையேந்தி நாளும்
கண்விழித்து வாயடக்கிக் காப்பாற்றி வைத்த
விண்ணுக்கு வெண்சுடராய் இருள்கிழிக்கும் வட்ட
விரிமதியாம் முழுநிலவாம் நீவளர்த்த செல்வப்
பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடியதைப் போலப்
பெயருக்குப் பட்டத்திற் கேற்றாற்போல் நல்ல
மண்ணுக்கு விதையமைத்தல் எனவெண்ண வேண்டும்
வளம்சேர்க்கும் பெருவிளைச்சல் அதனால்கை கூடும்.

மான்விழியாய் மலர்க்கொடியாய் இருந்தமனை யாட்டி
வாழ்க்கைக்கு வளம் சேர்க்க நீதேடிக் கண்ட
ஆண்மகனும் பெண்மகளும் அழகணிகள் பெற்றால்
அதுமட்டும் மனைவளர்க்க ஒருநாளும் போதா
தேன்மொழியர் மனமொத்துத் துணைசேர வேண்டும்
செழிப்படையும் மனைமாட்சி அஃதேபோல் நாட்டில்
வான்மழையால் நல்லவிதை செழித்தோங்க வேண்டும்
மண்வளமும் நீர்வளமும் ஏர்வளமும் வேண்டும்.

நிலப்பரப்பின் பெருக்கல்ல பெருவிளைவின் ஆக்கம்
நிலமாழ மாய்உழுதல் நல்லுழவின் நோக்கம்
பலபிள்ளை பெறுவதில்லை நற்குடும்ப நோக்கம்
பண்போடு வாழ்வதற்கு நல்லவுடல் தேவை