16+ அருமருந்து கல்விநலம் அவரவருக் கேற்ற ஆடைஅணி குடியிருப்புக் கெங்கேநாம் போவோம்? பெருமைங்க வேண்டுமெனில் நம்மரசு வாழப் ler) பிள்ளைப்பேற்றைத்தடுப்போம்! இதிலென்ன குற்றம்: நல்லுடலின் நல்வித்து நல்லறிவாம் அந்த நல்லறிவால் நாடுபல நனிவிளச்சல் காணும் நல்லுடலின் நல்வித்து நல்லறிஞர் அந்த நல்லறிஞ ரால் உலகம் முன்னேறக் கூடும் நல்லுடலின் நல்வளப்பம் ஊன் உடல்உழைப்பாம் நாலைந்து பிள்ளைபெற்ருல் உடல்மெலிந்து போகும் தொல்லேபல உண்டாகும் துயர்வந்து சூழும் - துடியிடையே கருப்பாட்டை அடைப்பதுவே இன்பம்! பெயல்தேக்கி வரப்பெடுத்துப் பெருவேலி கட்டிப் பெருவிளைச்சல் காண்பதற்கு முனைகின்ற உழவன் வயலினிலே எட்டியெட்டித் தனித்திருக்கும் நட்ட மரம்செடிகள் புல்பூண்டு நெற்கதிர்கள் போலக் கயல்விழியே இல்லத்தில் ஒன்றிரண்டு பிள்ளை . கண்டவர்கள் கருங்கல்லுக் குண்டைப்போல் நிற்பர் செயல்என்ன செய்தாலும் உன்எண்ணம் எல்லாம் சிறுகுடிசைப் பெருவாழ்வைச் சிந்திக்க வேண்டும். விண்குலத்தில் உடுக்கூட்டம் பலவிருந்தும் என்னும்? வெண்ணிலவுக் கீடுண்டோ? அஃதேபோல் இந்த மண்குலத்தில் நல்வித்தும் நல்விளைச்சல் கண்டும் மதிப்பென்னும் வாழ்வென்னம் பலபிள்ளை பெற்ருல்? பெண்குலந்தான் நினைத்துவிட்டால் எச்செயலும் நோக்கும் பிழையின்றி ஈடேறும் நல்வாழ்வு பிறக்கும் பண்குலத்துக் குயிலாளே நம்நாடு வாழப் பயிர்விளைப்போம் வயலினிலே இல்லத்தில் வேண்டாம்!
பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/168
Appearance