பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


உருவாக்கும் திருஇராம நாதர் அண்ணா
மலைகவரும் சான்றோரை உதவு கின்றார்!
பெருகவவர் நற்றொண்டு! வாழ்க! அண்ணா3
மலைக்கவரும் தம்பியரும் பின்விட் டாரே! 7

விண்தாவும் நீள்தென்னை விரிந்த பாளை
வெண்குருகென் றேசேல்கள் நீரில் தாவும்;
மண்தாவும் நெற்கதிர்கள்; பழுத்த வாழை
மரந்தாவும் வயல்பூத்த கரும்பின் மீது;
பண்தாவும் சோலையிலே பாடும் வண்டு
பனிமலரின் மேல்தாவும்; காணும் மக்கள்
கண்தாவும் மணிமாடத் தில்லை அண்ணா
மலைநகரத் தமிழ்மன்றில்; கவிய ரங்கில்! 8

கல்லெழுந்து மண்தோன்றாப் பழங்கா லத்துக்
குடிவழியில் வாழ்ந்தபெருங் கவிஞர் கூட்டம்
சொல்லெழுந்த இலக்கியமும் யாப்பும் தோன்றச்
சுவைமிகுக்கும் செந்தமிழை உயிரை வாழ்வை
எவ்லெழுந்து வருகின்ற ஒளியைப் போல
என்றென்றும் நிலைத்திருக்கப் படைக்க லானார்!
அல்லெழுந்து வருநிலவே கவிஞர் கூட்டம்!
அவரிபுகழோ வெண்ணிலவே! பாடக் கேளிர்! 9

நாள்: 18-2-1960.

இடம்: - அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் மன்றம்.

தலைவர்: புதுமைக் கவிஞர் வாணிதாசன்.

1. துணைவேந்தர் திரு. தி. மு. நாராயணசாமி பிள்ளை.

2. பண்டித, வித்துவான்., திரு. லெ. 'ப. கரு. இராமநாதன் செட்டியார்.

3. பேரறிஞர் அண்ணாதுரை.