49
வீசிக்கிடக்கும் விலைபோகும் மீன்கூடை
ஓசை உயர்நெய் தலே!
புதுவைச் சிறப்பு
(நேரிசை ஆசிரியப்பா)
இந்த நான்கு நிலத்தினும் இயைந்த
இனிய தாயகம்! தாயகம்4 அதனில்
இணைந்த மாநிலம் என்னரும் புதுவை!
தமிழர் வாழ்வினில் சழக்கரை வீழ்த்தித்
தழைத்த சங்க கால முதற்றே
வீரை வெளியனை5 ஈன்றது புதுவை!
விடுதலை வீரன் பாரதி யாரைச்
சீர்படுத்திச் சிறந்தது புதுவை!
பாட்டில் பைந்தமிழ்த் தேன் சுவை தேக்கிப்
பாருக் களித்தநம் பாரதி தாசனை
நாட்டுக் களித்தது நாம்வாழ் புதுவை!
ஆளும் அமைச்சருள் முதன்மை அமைச்சை
வேங்கட சுப்பை6 விளைத்ததும் புதுவை!
பாகூர்ச் சிறப்பு
பொங்கு நீள் புகழ் புதுவையைப் போலப்
பங்கு பெற்றதாம் பல்லவப் பாகூர்!
தொண்டை நீள்வலி தோற்றிடச் செய்யும்7
கவிஞர் நானான்கு கண்டதும் பாகூர்!
பாகூர் மாப்புகழ் பாடுதற் கெளிதோ?
இன்னும் எத்தனை எத்தனை யோவென
எண்ணச் சேர்ந்தே இணைந்த மாநிலம்
4