உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. புதியதோர் உலகு செய்வோம்!

வாழ்த்து
(குறள் வெண்பா)

திருக்கழுக் குன்றத்தில் செந்தமிழைப் பாடத்
திருக்கழு செய்க திரு

(அறுசீர் விருத்தம்)


தேன்கழி நீலம் புன்னை
      செழுமலர் தாழை யோடு
மான்மதம் மஞ்சள் பூசி
      மணப்பொடி உடலில் தேய்த்துக்
கூன் பிறை மகளிர் இல்லில்
      குளித்தநீர் கடலிற் சேரும்!
மீனெலாம் மணக்கும் மல்லை
      மிகுபுகழ்த் தொண்டை நாடே! 1

சேர்ந்ததால் சீர்த்தி பெற்ற
      திருக்கழுக்குன்றம் வாழும்
கூர்ந்தநல் வறிவு சான்ற
      குலத்தோரே! தாய்க்கு லத்தீர்!
தேர்ந்தநற் றமிழை ஓதிச்
      செந்தமிழ்க் கவிதை பாடச்
சார்ந்தோரே! வாணி தாசன்
      தலைதாழ்த்தி வணங்கி னேனே! 2

புதியதோர் உலகு செய்யப்
      போகின்றோம் இன்று நாமே!
‘புதியதோர் உலகில் இன்றி

      வேறெங்குப் புகுந்தோம்?’ என்றே

2