54
(கலிவெண்பா)
அன்பே! இதைக்கேள்: அழகுத் திருநாட்டில்
இன்பப் பெருவாழ்க்கை எல்லோரும் வேண்டுமெனில்
என்செய்ய வேண்டும் எனவெண்ண லானார்கள்;
நன்செய் வயலும் நனிபுன்செய்க் காடும்
இருந்தும் பயனென்ன? எந்நாளும் இவ்லில்
அருந்தும் உணவுக்(கு) அளவேடே2 கண்டனரே!
குன்ற மணிகண்ட3 முத்தமிழ் மன்றத்துக்
குன்ற மணிகண்ட4 கொள்கைப் புலவர்
பதின்மர் புதிய உலகைப் படைக்க
எதிரில் எழுந்தே இருக்கும் அறிஞர்முன்
தொண்டைவலி5 காட்டத் துடிக்கின்றார் ஐயிருவர்! தொண்டைவலில்6 காட்டத் தொடங்குமுன், என்னுயிரே!
ஆசை மனையாட்டி! அன்றலர்ந்த தாமரையே!
பேசும் புதிய உலகின் பெருஞ்சிறப்பை
வாயால் உரைப்பேன்; மனங்கொண்ட பின்னர்நீ
வாய்7மறுக்கக் கூடாதே! வாய்8மறுக்கக் கூடாதே!
புத்துலகம் செய்யும் செயல்புளித் தொக்கன்று!
புத்துலகம் செய்யப் பொறுமை நனிவேண்டும்!
மண்திருத்தும் ஏரோன் வயல்திருத்தல் போலவே
பெண்திருத்தம் வேண்டுமே பிள்ளை திருந்துதற்கே!
கண்9திருத்த வேண்டும்; அதில் வேற்றுமை காண்பதுவோ?
கண்திருந்திப் போனாலெக் கண்ணும் திருந்திவிடும்;
சாதி முளைக்காது; தான்தனது தோன்றாது,
நீதி நிலைக்கும்; நிலைத்திருக்கும் அஞ்சாமை!
புத்துலக எண்ணப் புதுவிதையைத் தூவிவிட்டால்
கொத்தாய்த் துளிர்க்கும்; குலைபழுக்கும் நல்வாழ்வு!