உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

இத்தனையும் செய்ய எதிரில் வரும்பகைகள்
அத்தனையும் தாங்கும் அறிவுத் திறம்வேண்டும்!

தாய்மாரின் பங்கு சரியாங்கே என்பேன்நான்!
ஆய்மார்கள் இல்லத்தின் ஆய்மார்கள் ஆகாதீர்!10

இன்னுங்கேள்: பாடல் இசைக்கும் சிறுகுயிலே!
முன்னுக்கே ஏற முயல்வதுவே புத்துலகம்!

வாழும் உயிரினங்கள் எல்லாம் ஒருசாதி!
சூழ்ந்திருக்கும் ஆண்பெண் தொகுப்பில்லை அவ்வுலகில்!

தேவை பொதுவாங்கே! செய்யுந்தொழில் பொதுவாம்!
காவல் பொதுவாங்கே! காசு பொதுவாங்கே!

ஆன்ற அறிவே அவரவரின் வேற்றுமையாய்த்
தோன்றினும் வேறொன்றும் தோன்றாதே அவ்வுலகில்

தாய்மொழியில் ஆட்சி ததபுலவர் நல்விளைவு
தாய்மொழியில் கொண்டு தருவார் உலகில்

இயற்கை எதிர்த்தாலும், இன்னல் நேர்ந்தாலும்
செயற்கை முறையிற் செயற்படுவர்; வெற்றிகொள்வர்!

எங்கும் தொழிற்பெருக்கம்! இல்லாமை இல்லையாங்கே!
தங்கட்குப் போகத் தகுபொருளை மற்றவர்க்கும்

பங்கிட்டுத் துய்க்கின்ற பண்பாளர் புத்துலகில்!
தெங்கிளநீர்ச் சொல்லுடையோர், ஈன்ற திருநாட்டைத்

தங்கள் உயிர்கொடுத்துங் காக்கத் தயங்காதார்
எங்கும் அயலுக்(கு) இருகையை நீட்டிடுவர்!

சண்டை கிடையாது; தன்மானம் நீங்காது;
முண்டிவந்த எப்பகையும் மூச்சோடு போகாது!

கொண்டல் தவழும் குளிர்மலையும் நீள்கடலும்
அண்ட வெளியும் அரசோச்சும் நல்லறிவு!

நான்பாடும் பாடலினால் நாழிகை ஆகிறது!
தேன்கொழிக்கும் புத்துலகச் செய்தியை நம்கவிஞர்